குத்துச்சண்டை: போலந்தில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

போலந்து தலைநகரான வார்சாவில் நடைபெற்ற 36ஆவது ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் , இந்திய வீரர்கள் கௌரவ் சோலங்கி, மணீஷ் கௌசிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.
குத்துச்சண்டை: போலந்தில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

போலந்து தலைநகரான வார்சாவில் நடைபெற்ற 36ஆவது ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் , இந்திய வீரர்கள் கௌரவ் சோலங்கி, மணீஷ் கௌசிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.
 ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் இந்தியா 6 பதக்கங்களை வென்றுள்ளது. 2 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
 22 வயது சோலங்கி 52 கிலோ எடைப் பிரிவில் இங்கிலாந்து வீரர் வில்லியம் காவ்லேவை எதிர்கொண்டார். இதில், 5-0 என்ற கணக்கில் வென்றார் சோலங்கி.
 கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஃபிளை வெயிட் பிரிவில் அவர் தங்கம் வென்றிருந்தார்.
 காமன்வெல்த் போட்டியில் லைட் வெயிட் பிரிவில் வெள்ளி வென்ற 23 வயது மணீஷ் கௌசிக், ஃபெலிக்ஸ் ஸ்டாம் போட்டியில் 60 கிலோ பிரிவில் போட்டியிட்டு தங்கம் வென்றார்.
 மொராக்கோ வீரர் முகமது ஹாம்அவுட்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
 இந்திய வீரர் ஹுசாமுதீன் (56 கிலோ எடைப் பிரிவு) வெள்ளியும், அரையிறுதி வரை முன்னேறிய மன்தீப் ஜங்ரா (69 கிலோ), சஞ்சீத் (91 கிலோ), அங்கித் கடானா (64 கிலோ) வெண்கலமும் வென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com