திங்கள்கிழமை 20 மே 2019

யு-19 பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் வாய்ப்பு: யூனிஸ் கான் நிராகரிப்பு

DIN | Published: 06th May 2019 01:54 AM

19 வயதுக்குள்பட்டோருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பை அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் நிராகரித்துவிட்டார்.
 தேர்வுக் குழுத் தலைவர், தலைமைப் பயிற்சியாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் அளிக்க வேண்டும் என்று யூனிஸ் கான் கோரிக்கை விடுத்திருந்தார்.
 அவரது கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துவிட்டது. இதனால், அவர் பயிற்சியாளராகும் வாய்ப்பை நிராகரித்துவிட்டார். முழு சுதந்திரம் கிடைத்தால் மட்டும் தன்னால் ஜூனியர் அணியை வழிநடத்திச் செல்ல முடியும் என்றும் அவர் கூறிவிட்டார். அவர் இனி கிரிக்கெட் வாரியத்தில் பணி புரியமாட்டார் என்று தெரிகிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
 யூனிஸ் கான், 2017ஆம் ஆண்டு அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் யூனிஸ் கான்.
 19 வயதுக்குள்பட்டோருக்கான பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தது. கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த காரணத்தால் இலங்கைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் மாதம் இந்த அணி தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஓய்வுக்குப் பிறகு...: ரகசியத்தை வெளிப்படுத்திய தோனி! (விடியோ)
புற்றுநோய்க்கு இரண்டு வயது மகளைப் பறிகொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று அதிரடி மாற்றங்கள்!
இத்தாலி ஓபன்: நடால், பிளிஸ்கோவா சாம்பியன்
யுவராஜ் சிங் ஓய்வு?