திங்கள்கிழமை 20 மே 2019

மாட்ரிட் ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் ஒஸாகா

DIN | Published: 06th May 2019 01:52 AM

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில், சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நவாமி ஒஸாகா 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியா வீராங்கனை டொமினிக்கா கிபுல்கோவாவை வீழ்த்தினார்.
 மாட்ரிட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் களம் கண்டார் ஒஸாகா. அந்த செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதில் அவர் கைப்பற்றினார். அடுத்த செட் ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது.
 அந்த செட்டை விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக விளையாடினார் கிபுல்கோவா. இருவரும் சளைக்காமல் விளையாடியதால் அந்த செட் டை பிரேக்கர் வரை சென்றது. பின்னர் 7-6 (8-6) என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார் ஒஸாகா.
 வயிற்று தசையில் வலியுடன் விளையாடினார் ஒஸாகா. ஆட்டத்துக்கு பிறகு அவர் கூறுகையில், "வலி அதிகம் இல்லை. தற்போது நன்றாக உணர்கிறேன்' என்றார்.
 இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை சாரா சாரிப்ஸ் டர்மோவை திங்கள்கிழமை எதிர்கொள்கிறார் ஒஸாகா.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஓய்வுக்குப் பிறகு...: ரகசியத்தை வெளிப்படுத்திய தோனி! (விடியோ)
புற்றுநோய்க்கு இரண்டு வயது மகளைப் பறிகொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று அதிரடி மாற்றங்கள்!
இத்தாலி ஓபன்: நடால், பிளிஸ்கோவா சாம்பியன்
யுவராஜ் சிங் ஓய்வு?