ராஜஸ்தான் பிளே ஆஃப் கனவை சிதைத்தது தில்லி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி கேபிடல்ஸ். ரிஷப் பந்த் 53 ரன்களுடன் தில்லியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
ராஜஸ்தான் பிளே ஆஃப் கனவை சிதைத்தது தில்லி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி கேபிடல்ஸ். ரிஷப் பந்த் 53 ரன்களுடன் தில்லியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் ராஜஸ்தான் கனவு சிதைந்து போனது.
 ஐபிஎல் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெறும் முனைப்பில் உள்ள தில்லிக்கும், போட்டியில் இருந்து வெளியேறுமோ என்ற அபாயத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான ஆட்டம் சனிக்கிழமை மாலை புது தில்லியில் நடைபெற்றது. ராஜஸ்தான் அணியில் ஸ்மித், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நாடு திரும்பி விட்டனர். தில்லி அணியில் காயம் காரணமாக ககிúஸா ரபாடா நாடு திரும்பி விட்டார்.
 ஆரம்பமே அதிர்ச்சி: டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் தரப்பில் ரஹானே-லிவிங்ஸ்டோன் களமிறங்கினர். ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. ரஹானே 2, லிவிங்ஸ்டோன் 14, சஞ்சு சாம்சன் 5, மஹிபால்லோம் ரோர் 8 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினர். இஷாந்த் சர்மாவின் óஅதிரடி பந்துவீச்சால் ரஹானே, லிவிங்ஸ்டோன், மஹிபால் வெளியேறினர்.
 அப்போது 4 விக்கெட் இழப்புக்கு 30 ரன்களுடன் தடுமாறியது ராஜஸ்தான்.
 ரியான் பராக் அபாரம்: பின்னர் ரியான்பராக்-ஷிரேயஸ் கோபால் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 10-ஆவது ஓவர் நிறைவில் 55 ரன்களை சேர்த்திருந்தது ஆர்ஆர். எனினும் 12 ரன்களுடன் ஷிரேயஸ் கோபாலும், 6 ரன்களுடன் கிருஷ்ணப்ப கெளதமும் வெளியேறினர்.
 அவருக்கு பின் வந்த ஸ்டுவர்ட் பின்னி கோல்டன் டக் அவுட்டானார். இஷி சோதியை 6 ரன்களுடன் வெளியேற்றினார் பெளல்ட்.
 அரைசதம் அடித்த இளம் வீரர் சாதனை: 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 50 ரன்களை விளாசிய ரியான் பராக்கை அவுட்டாக்கினார் பெளல்ட். இதன் மூலம் ஐபிஎல்லில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார்.
 இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான்.
 116 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தில்லி அணியும் தொடக்கத்தில் சரிவை சந்தித்தது.
 பிரித்வி ஷா 8, ஷிகர் தவன் 16, கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 15 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். பின்னர் இளம் வீரர் ரிஷப் பந்த்-இங்கிராம் இணை அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றது. 12 ரன்களோடு காலின் இங்கிராமும், 11 ரன்களோடு ஷெர்பேன் ரூதர்போர்டும் வெளியேறினர்.
 ரிஷப் பந்த் அதிரடி ஆட்டம் (53): 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 53 ரன்களுடன் ரிஷப் பந்த்தும், 1 ரன்னுடன் அக்ஸர் பட்டேலும் அவுட்டாகாமல் இருந்தனர். சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை எட்டினார் பந்த்.
 3.5 ஓவர்கள் மீதமிருக்க 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து வென்றது தில்லி.
 ராஜஸ்தான தரப்பில் இஷ் சோதி 3-26, ஷிரேயஸ் கோபால் 2-21 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 ராஜஸ்தான் வெளியேற்றம்: இத்தோல்வியால் 2019 ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது ராஜஸ்தான். புள்ளிகள் பட்டியலில் தில்லி 18 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியது.
 இன்றைய ஆட்டங்கள்
 சென்னை-பஞ்சாப்,
 இடம்: மொஹாலி,
 நேரம்: மாலை 4.00.
 மும்பை-கொல்கத்தா,
 இடம்: மும்பை,
 நேரம்: இரவு 8.00.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com