துளிகள்...

தனது சுயசரிதை புத்தகமான கேம் சேஞ்சரில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் குறித்து தரமற்ற முறையில் விமர்சித்து எழுதிய பாக். முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை நல்ல மனநல மருத்துவரிடம்

*இந்திய வில்வித்தை சங்கத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தல் செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மூத்த துணைத் தலைவர் சுனில் சர்மா தலைமையில் இடைக்கால குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் தேர்தலை 4 வாரங்களில் நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*இந்திய தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தென்கொரிய உலகக் கோப்பை வீரர் லீ மின் சுங், பெங்களூரு எஃப்சி பயிற்சியாளர் ஆல்பர்ட் ரோக்கா, குரோஷியா முன்னாள் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், ஸ்வீடன் முன்னாள் பயிற்சியாளர் ஹாகன் எரிக்ஸன் ஆகியோரதை பெயர்களை இறுதி செய்துள்ளது ஏஐஎப்எப். இவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்.
*தனது சுயசரிதை புத்தகமான கேம் சேஞ்சரில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் குறித்து தரமற்ற முறையில் விமர்சித்து எழுதிய பாக். முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாக கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா முறையில் வந்து சிகிச்சை பெறுமாறு அப்ரிடிக்கு அவர் கூறியுள்ளார்.
*மும்பையில் நடக்கவுள்ள உள்ளூர் டி20 லீக் போட்டியில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.5 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளது ஆகாஷ் டைகர்ஸ் மும்பை மேற்கு அணி.
*இத்தாலி சீரி ஏ கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை இரவு டொரினா--ஜுவென்டஸ் இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com