சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

உலகக் கோப்பைக்குப் பிறகு வீரர்களுக்கு ஓய்வு: ஆகஸ்டில் தொடங்கும் மே.இ. தொடர்!

By எழில்| DIN | Published: 01st May 2019 03:51 PM

 

உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபிறகு நேரடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்வதாகத் திட்டமிட்ட நிலையில் அதில் சிறிய மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. 

உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று இரு டெஸ்டுகள், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஜூலை 14 அன்று நடைபெறுகிறது. அதன்பிறகு இங்கிலாந்திலிருந்து இந்திய அணி நேரடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இந்திய வீரர்கள் இந்தியாவில் ஒரு வாரம் ஓய்வெடுத்து, அதன்பிறகு புத்துணர்ச்சியுடன் அடுத்தப் போட்டிகளில் பங்கேற்கவேண்டும் என்று பிசிசிஐ, மே.இ. கிரிக்கெட் சங்கத்திடம் கோரிக்கை வைத்தது. இதற்கு மே.இ. கிரிக்கெட் சங்கம் ஒப்புக்கொண்டது. 

இதனால் கரீபியன் பிரீமியர் லீக் போட்டியும் (சிபிஎல்) தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலில் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறுவதாக இருந்தது. இப்போது செப்டம்பர் 4 அன்று தொடங்கி அக்டோபர் 12 வரை சிபிஎல் நடைபெறவுள்ளது. 

இதையடுத்து இந்தியா - மே.இ. தொடர் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி செப்டம்பர் 4 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படவுள்ளது. 

மேலும் டெஸ்ட் தொடருக்கு முன்பு 3 நாள் பயிற்சி ஆட்டம் குறித்த பிசிசிஐயின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா 297
உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய் பிரணீத்
அணியில் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியாக உள்ளது: கவாஸ்கர்
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா 297
நான் சுயநலவாதி இல்லை, அணியே முக்கியம்: ரஹானே