செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

முதலிடத்தை பெறுவது யார்? தில்லி-சென்னை இன்று மோதல்

DIN | Published: 01st May 2019 12:55 AM
பயிற்சியில் தில்லி-சென்னை அணி வீரர்கள்.


ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெற்றே தீர வேண்டிய மும்முரத்தில் சென்னை-தில்லி அணிகள் உள்ளன.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னையில் புதன்கிழமை இரவு நடைபெறுகிறது.
மும்பையிடம் பெற்ற தோல்வியால் நடப்பு சாம்பியன் சென்னையின் ரன் சராசரி சற்று கீழிறங்கி விட்டது. இதனால் தில்லியை வென்று மீண்டும் முதலிடத்தை பெற தீவிரமாக உள்ளது சென்னை. அடுத்த 2 ஆட்டங்களிலும் வென்று உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில்  குவாலிபையர்-1 ஆட்டத்தில் ஆடுவது சிஎஸ்கேவுக்கு சாதகமாக இருக்கும்.
தோனி இல்லாத நிலையில் மும்பைக்கு எதிராக சோபிக்கவில்லை. உடல் தகுதி பெற்று தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி ஆடுவார் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் 5 ஆட்டங்களில் நான்கு வெற்றிகளை குவித்து தில்லி அணி முழு நம்பிக்கையுடன் காணப்படுகிறது. இளம் கேப்டன் ஷிரேயஸ் ஐயர் அணியை செம்மையாக வழிநடத்தி செல்கிறார். சென்னையின் பிட்ச் மெதுவாக பந்துவீசுபவர்களுக்கு கைகொடுக்கும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்
சென்னை-தில்லி,
இடம்: சென்னை,
நேரம்: இரவு 8.00.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காயத்திலிருந்து எப்போது மீள்வேன் எனத் தெரியாது: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா
பேக்கரி கூட வைத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட் வேண்டாம்: நியூஸி. ஆல்-ரவுண்டர் வேதனை
உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்தின் சாதனைகள்
மே.இ.தீவுகள் தொடருக்கான  இந்திய அணி தேர்வு: 19-இல் நடக்கிறது
ஐசிசி உலகக் கோப்பை லெவன் அணியில் பும்ரா, ரோஹித் சேர்ப்பு: கோலிக்கு இடமில்லை