செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

மழையால் பாதிப்பு: பெங்களூரு- ராஜஸ்தான் டி5 ஆட்டம் முடிவின்றி நிறைவு

DIN | Published: 01st May 2019 01:18 AM
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷிரேயஸ் கோபால்


மழையால் பாதிக்கப்பட்டு 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் எந்தவித முடிவும் இன்றி நிறைவடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது.
எனினும் டாஸ் முடிந்தவுடன் தீவிரமாக மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவது தடை பட்டது.  தொடர்ந்து மழை பெய்ததால் வானிலை சீரானவுடன் போட்டி தொடங்கப்படும் என நடுவர்கள் அறிவித்தனர். மழை ஒரளவு நின்ற நிலையில் மைதான பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட தயாரானார்கள். ஆனால் மழை மீண்டும் தொடங்கியதால் அவர்கள் எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை.
5 ஓவர்களாக குறைப்பு
தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியை  நடத்த இரவு 11.26 மணியே இறுதி நேரமாகும். இதற்கிடையே 11.05 மணிக்கு மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் 5 ஓவர்களாக குறைத்து போட்டியை நடத்த முடிவு செய்தனர்.
முதல் ஓவரில் 23 ரன்கள்
அதன்படி 11.26 மணிக்கு பெங்களூரு அணி தரப்பில் விராட்கோலி-டிவில்லியர்ஸ் களமிறங்கினர். வருண் ஆரோன் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை கோலி விளாசினார்.  வில்லியர்ஸும் விளாச முதல் ஓவரிலேயே 23 ரன்களை குவித்தது பெங்களூரு.
ஷிரேயஸ் கோபால் ஹாட்ரிக்
3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 25 ரன்களை விளாசிய கோலியை அவுட்டாக்கினார் ஷிரேயஸ் கோபால்.
அவருக்கு பின் டி வில்லியர்ஸ் 10 ரன்களுடன் வெளியேறினார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் கோல்டன் டக் அவுட்டானார். தொடர்ந்து மூவரை அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷிரேயஸ் கோபால்.
ரியான் பராக் பந்துவீச்சில் 6 ரன்களுடன் வெளியேறினார் குர்கீரத் சிங் மான். பார்த்திவ் 8, பவன் நேகி 4 ரன்களிலும் அவுட்டாகினர். 
உமேஷ், நவ்தீப் சைனி, ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் 5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை குவித்தது பெங்களூரு.
லிவிங்ஸ்டோன்-சாம்சன் அதிரடி
63 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி தரப்பில் சஞ்சு சாம்சன்-லிவிங்ஸ்டோன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியதால் 3 ஆவது ஓவர் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை எடுத்தது ராஜஸ்தான். 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 28 ரன்களை விளாசிய சாம்சனை அவுட்டாக்கினார் சஹல்.
அப்போது 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்களை எடுத்திருந்தது ராஜஸ்தான். மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் கைவிடப்பட்டது. லிவிங்ஸ்டோன் 11 ரன்னுடன் களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் சஹல் 1 விக்கெட்டை வீழ்த்தினார். 
ராஜஸ்தான், பெங்களுக்கு என இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டது.
வெற்றி மிக அருகில் இருந்தும்  மழையால் ராஜஸ்தான் கோட்டை விட்டது. இதனால் கடைசி ஒரு ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

எங்களிடம் உலகக் கோப்பை வந்துவிட்டது: இங்கிலாந்து கிரிக்கெட் இயக்குநர் பெருமை!
காயத்திலிருந்து எப்போது மீள்வேன் எனத் தெரியாது: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா
பேக்கரி கூட வைத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட் வேண்டாம்: நியூஸி. ஆல்-ரவுண்டர் வேதனை
உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்தின் சாதனைகள்
மே.இ.தீவுகள் தொடருக்கான  இந்திய அணி தேர்வு: 19-இல் நடக்கிறது