திங்கள்கிழமை 20 மே 2019

துளிகள்...

DIN | Published: 01st May 2019 12:51 AM


உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல், முகமது ஷமிக்கு சிறந்த உடல்தகுதியை கிடைக்கச் செய்தது. கடந்த 18 மாதங்களாக இதனால் அவர் காயமின்றி, பல்வேறு தொடர்களில் சிறப்பாக பந்துவீசி வருகிறார் என பஞ்சாப் அணி உடலியக்க நிபுணர் பிரெட் ஹாரோப் கூறியுள்ளார்.


ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக டெண்டுல்கர், லஷ்மணை விசாரணைக்கு பிசிசிஐ மத்தியஸ்தர் டிகே. ஜெயின் அழைக்கும் போது, பிசிசிஐ சிஇஓ, சட்ட நிபுணர்கள் குழு உடனிருப்பர். இப்பிரச்னையில் இருவரும் விளக்கம் தந்த நிலையில் நேரில் விசாரணை நடத்த மத்தியஸ்தர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்களின் வெற்றிகரமான செயல்பாடு எதிரொலியாக, வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக தயார் செய்ய ஏற்பாடுகளை செய்ய இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தீர்மானித்துள்ளது. 


நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்றுக்கு இந்திய இளம் நட்சத்திரம் லக்ஷயா சென் முன்னேறியுள்ளார்.


ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக அளித்த விளக்கத்தில் பிசிசிஐ சிஓவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பிசிசிஐ ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ள லஷ்மண், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வழிகாட்டியாகவும் உள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இத்தாலி ஓபன்: நடால், பிளிஸ்கோவா சாம்பியன்
யுவராஜ் சிங் ஓய்வு?
உலகக் கோப்பை ஆட்டத்தின் போக்கையே மாற்றிய 10 தருணங்கள்: 1979 உலகக் கோப்பை பாகிஸ்தான்-மே.இ.தீவுகள் அரையிறுதி ஆட்டம்
2019 ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள்...
மே.இ. தீவுகள் அணியின் ரிசர்வ் வீரர்களாக பொல்லார்ட், பிராவோ தேர்வு