செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

உலகக் கோப்பைக்கான அனுபவமாக  ஐபிஎல் ஆட்டங்கள் அமைந்தன:  டேவிட் வார்னர்

DIN | Published: 01st May 2019 12:55 AM


உலகக் கோப்பை போட்டிக்கான படிக்கல்லாக ஐபிஎல் ஆட்ட அனுபவம் உள்ளது என ஹைதராபாத் அதிரடி வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
பஞ்சாபுக்கு எதிராக ஐபிஎல் 2019 சீசனில் தனது கடைசி ஆட்டதை ஆடினார் வார்னர். இதில் அபாரமாக ஆடி 81 ரன்களை விளாசி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
அவர் கூறியதாவது-
எனக்கு தரப்பட்ட பணியை சிறப்பாக செய்தேன். நல்ல செயல்திட்டம், உள்ளுணர்வு போன்றவற்றால், எங்கள் அணி ஒருங்கிணைந்து ஆடியது. களப்பணியாளர்களும்சிறப்பான பிட்சை அமைத்திருந்தனர். சிறப்பாக ஆடி ரன்களை குவித்து அணியை நல்ல நிலையில் வைத்திருந்தோம் .
தடைக் காலத்தால் 18 வாரங்கள் பேட்டையே தொடவில்லை. சிறந்த கணவர், தந்தையாக இருந்தது அணிக்கும் உதவியாகவும் இருந்தது. வழக்கமான நமது இயற்கையான ஆட்டத்தை ஆட வேண்டும். இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் பெரிய ஸ்கோர்களை எதிர்பார்க்கலாம். நடப்புச் சாம்பியனாக உள்ள நாங்கள்.வீரர்களின் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து எதிர்கொள்கிறோம் என்றார்.
கேன் வில்லியம்ஸன் (ஹைதராபாத் கேப்டன்): சீசன் முழுவதும் 2 புள்ளிகள் கிடைக்குமா என எதிர்பார்த்து ஆடி வருகிறோம். வார்னர்-பேர்ஸ்டோவ் உலகின் சிறந்த வீரர்களாக உள்ள நிலையில், அணியை நல்ல நிலையில் வைத்திருந்தனர். அடுத்து முக்கியமான  2 ஆட்டங்கள் உள்ளன. அவற்றில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். பீல்டிங் சிறப்பாக மேம்பட்டுள்ளது. விடைபெற்ற வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை சேர்க்க வேண்டும். தொடர் வெற்றிகளை குவிக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
அஸ்வின் (பஞ்சாப் கேப்டன்):
முந்தைய ஆட்டங்களை பற்றி நினைப்பது சரியானதில்லை. ஹைதராபாதுடன் நடந்த ஆட்டத்தில் அனைத்து துறைகளிலும் எங்களை அவர்கள் நிலைகுலையச் செய்தனர். பவர்பிளேயில் மோசமாக ஆடினோம். 190 ரன்களுக்கு மேல் சேஸ் செய்வதில் சிரமம் இருந்தது. ஐபிஎல் இந்த கட்டத்தில் தொடர்ந்து வெல்ல வேண்டும். நாங்கள் எளிதில் போட்டியில் இருந்து வெளியேற மாட்டோம். மீதமுள்ள ஆட்டங்களில் கடுமையாகப் போராடும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காயத்திலிருந்து எப்போது மீள்வேன் எனத் தெரியாது: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா
பேக்கரி கூட வைத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட் வேண்டாம்: நியூஸி. ஆல்-ரவுண்டர் வேதனை
உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்தின் சாதனைகள்
மே.இ.தீவுகள் தொடருக்கான  இந்திய அணி தேர்வு: 19-இல் நடக்கிறது
ஐசிசி உலகக் கோப்பை லெவன் அணியில் பும்ரா, ரோஹித் சேர்ப்பு: கோலிக்கு இடமில்லை