திங்கள்கிழமை 20 மே 2019

இந்திய குத்துச்சண்டை லீக் போட்டி: ஜூலையில் தொடக்கம்

DIN | Published: 01st May 2019 12:51 AM


இந்திய குத்துச்சண்டை லீக் போட்டிகள் ஜூலையில் தொடங்கப்பட உள்ளன என இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (பிஎப்ஐ) தெரிவித்துள்ளது.
கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் அணிகள் அடிப்படையிலான லீக் போட்டிகள் வெற்றிகரமாக அந்தந்த தேசிய சம்மேளனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கலால் நடத்தப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில் குத்துச்சண்டையிலும் லீக் போட்டிகளை அறிமுகம் செய்ய பிஎப்ஐ முடிவு செய்தது. இதையடுத்து லீகை நடத்துவதற்கான வர்த்தக உரிமையை அளிப்பதற்கான ஒப்பந்தத்தை கோரியது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் புரோ லீக் பணிகள் தொடங்கி இருந்தன.
தற்போது தான் இப்பணி முழு வடிவம் பெற்றுள்ளது.
ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை 3 வாரங்கள் குத்துச்சண்டை லீக் போட்டி நடைபெறும். தில்லியைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் லைவ் விளையாட்டு மேலாண்மை நிறுவனம் வர்த்தக உரிமையை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கெனவே புரோ பாட்மிண்டன் லீகை நடத்தி வருகிறது.
ஆசிய சாம்பியன்கள் அமித் பங்கால், ஷிவ தாபா, சரிதா தேவி, அயல்நாட்டு வீரர், வீராங்கனைகள் உள்பட பலர் லீகில் பங்கேற்க கையெழுத்திட்டுள்ளனர். ஆடவர், மகளிர் கலப்பு அணிகளும் இடம் பெறும். அணி உரிமையாளர்கள், பிரதான ஸ்பான்ஸ்ர், உள்பட அனைத்தும் தேர்தல் முடிந்தபின் தீர்மானிக்கப்படும்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியை ஒளிபரப்ப உள்ளது. தொலைக்காட்சியில் 10 கோடி பார்வையாளர்கள், டிஜிட்டல் முறையில் 20 கோடி பார்வையாளர்களை ஈர்ப்பதே நோக்கம் என ஸ்போர்ட்ஸ் லைவ் மேலாண் இயக்குநர் அதுல் பாண்டே தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இத்தாலி ஓபன்: நடால், பிளிஸ்கோவா சாம்பியன்
யுவராஜ் சிங் ஓய்வு?
உலகக் கோப்பை ஆட்டத்தின் போக்கையே மாற்றிய 10 தருணங்கள்: 1979 உலகக் கோப்பை பாகிஸ்தான்-மே.இ.தீவுகள் அரையிறுதி ஆட்டம்
2019 ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள்...
மே.இ. தீவுகள் அணியின் ரிசர்வ் வீரர்களாக பொல்லார்ட், பிராவோ தேர்வு