ஆஸி.யை எதிர்கொள்கிறது பாக். அணி: இன்று முதல் ஒரு நாள் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது ஆட்டம் ஷார்ஜாவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஆஸி.யை எதிர்கொள்கிறது பாக். அணி: இன்று முதல் ஒரு நாள் கிரிக்கெட்


ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது ஆட்டம் ஷார்ஜாவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், இரு அணிகளும் சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஷோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, கேப்டன் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸி., அணியை எதிர்கொள்கிறது.
அண்மையில் தென்னாப்பிரிக்காவிடம் 3-2 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி வீரர்களை மாற்றம் செய்துள்ளது. 
இமாம் உல் ஹக், ஷான் மசூத், ஹாரிஸ் சோஹைல் உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்கள் பாக்., வசம் உள்ளனர்.
ஆஸி., அணியை பொறுத்தவரை நல்ல ஆட்டத் திறனுடன் விளங்கி வருகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அந்த அணி, டி20, ஒரு நாள் தொடரில் வெற்றி வாகை சூடியுள்ளது.
உஸ்மான் கவாஜா, ஆரோன் ஃபின்ச், மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல ஆட்டத் திறனுடன் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் கடந்த 18 ஆண்டுகளில் ஆஸி., அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. இந்த காலகட்டத்தில் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் ஆட்டங்களில் இரு அணிகளும் விளையாடிவுள்ளன.
இதற்கு முன்பு கடந்த 1990ஆம் ஆண்டில் இம்ரான் கான் தலைமையிலான பாக்., அணி ஆஸி., அணியை ஷார்ஜாவில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com