ராகுல்-பாண்டியா பிரச்னை: மத்தியஸ்தரிடம் கொண்டு செல்ல பிசிசிஐ சிஓஏ முடிவு

பெண்களை தரக்குறைவாக ராகுல்-பாண்டியா ஆகியோர் பேசியதாக எழுந்த பிரச்னையை மத்தியஸ்தரிடம் கொண்டு செல்ல பிசிசிஐ சிஓஏ வினோத் ராய் முடிவு செய்துள்ளார்.

பெண்களை தரக்குறைவாக ராகுல்-பாண்டியா ஆகியோர் பேசியதாக எழுந்த பிரச்னையை மத்தியஸ்தரிடம் கொண்டு செல்ல பிசிசிஐ சிஓஏ வினோத் ராய் முடிவு செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல்-ஹார்திக் பாண்டியா ஆகியோர் பெண்கள் தொடர்பாக தரக்குறைவான கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆஸி.சுற்றுப்பயணத்தில் இருந்து 2 பேரையும் நாடு திரும்ப பிசிசிஐ உத்தரவிட்டது. மேலும் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த மத்தியஸ்தரை நியமிக்க உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டது பிசிசிஐ. அதன்படி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டிகே.ஜெயின் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் முதன்முறையாக பிசிசிஐ சிஓஏ கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது. அப்போது ராகுல்-பாண்டியா பிரச்னை மத்தியஸ்தரிடம் கொண்டு செல்லப்படும் என்றார்.
மேலும் டிகே. ஜெயின் கூறுகையில் பிசிசிஐ சிஓஏ அனுப்பும் எந்த பிரச்னை தொடர்பாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார். சிஓஏவில் புதிய உறுப்பினராக லெப்டினன்ட் ஜெனரல் ரவி தோட்கே நியமிக்கப்பட்ட பின் குழுக் கூட்டம் முதன்முறையாக கூடுகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளிடன் உறவைத் துண்டிக்க வேண்டும் என பிசிசிஐ எழுதிய கடிதம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஐசிசி பதில் கூறியுள்ளது குறித்தும் விவாதிக்கப்படும். ஐபிஎல் போட்டி நிதி மற்றும் அட்டவணை தொடர்பான விவகாரங்களும் கையாளடப்படும் எனத்தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com