முதல் டி20: இங்கிலாந்து வெற்றி

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் ஆடிய  மே.இ.தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. நிக்கோலஸ் பூரன் 58, டேரன் பிரவோ 28 ரன்களை விளாசினர். நிக்கோலஸ் ரன் குவிப்பில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும். இங்கிலாந்து தரப்பில் டாம் கர்ரன் 4-36  கிறிஸ் ஜோர்டான் 2-16 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களிலேயே 6 விக்கெட்டை மட்டுமே இழந்து 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 2 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 68 ரன்களை விளாசினார் பேர்ஸ்டோவ். 
ஜோ டென்லி 30 ரன்களை சேர்த்தார். மேஇ.தீவுகள் தரப்பில் ஷெல்டன் கால்ட்ரெல் 3-29 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 4 விக்கெட் வித்திúôயாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து. 3 ஆட்டங்கள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com