அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ள இந்திய கால்பந்து சூப்பர் லீக் 2019

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐஎஸ்எல்  இந்திய கால்பந்து சூப்பர் லீக் 2019 போட்டி பிளே ஆஃப் எனப்படும் அரையிறுதிச் சுற்றை   எட்டியுள்ளது.
அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ள இந்திய கால்பந்து சூப்பர் லீக் 2019

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐஎஸ்எல்  இந்திய கால்பந்து சூப்பர் லீக் 2019 போட்டி பிளே ஆஃப் எனப்படும் அரையிறுதிச் சுற்றை   எட்டியுள்ளது.
கிரிக்கெட்டை மட்டுமே அதிகம் விரும்பும் ரசிகர்கள் உள்ள இந்தியாவில் கால்பந்து ஆட்டத்தையும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) அறிமுகம் செய்யப்பட்டது. நான்கு சீசன்களாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த இப்போட்டியின் 5-ஆவது சீசன் கடந்த 2018 செப்டம்பர் 29-இல் தொடங்கியது. டிசம்பர் 17-ஆம் தேதி வரையில் தான் போட்டி அட்டவணை முதலில் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பிஃபா போட்டிகள் எதிரொலி மற்றும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தயாராகும் வகையில் பயிற்சி முகாம் போன்றவை நடைபெற்றதால், இடைவெளி விடப்பட்டது. முதன்முறையாக நாள் ஒன்றுக்கு 2 ஆட்டங்கள் நடைபெற்றது மாற்றப்பட்டு ஓரே ஆட்டம் மட்டுமே நடத்தப்பட்டது. நான்கு சீசன்களில் கொல்கத்தா, சென்னை தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தன.
சென்னையின் அணி படுதோல்வி: நடப்பு சாம்பியன் சென்னையின் எஃப்சி அணி 5-ஆவது சீசனில் படுதோல்வியை சந்தித்தது. 18 ஆட்டங்கள் ஆடி 2 வெற்றிகள் மட்டுமே பெற்று, 13-இல் தோல்வி, 3-ஐ டிரா செய்து, பட்டியலில் 9புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. 
அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்: அதே நேரத்தில் பெங்களூரு எஃப்சி 18 ஆட்டஙகளில் 10-இல் வெற்றியுடன் 34 புள்ளிகளுடன் முதலிடத்தையும், எஃப்சி கோவா அதே 34 புள்ளிகளுடன் சராசரி அடிப்படையில் இரண்டாம் இடத்தையும், மும்பை சிட்டி எஃப்சி அணி 18-இல் 9 வெற்றியுடன் 30 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் 18-இல் 7 வெற்றியுடன் 29 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தன.
2 முறை ஆட வேண்டும்: நான்கு அணிகளும் தலா 2 முறை அரையிறுதிச் சுற்று ஆட்டங்களில் ஆட வேண்டும். பெங்களூரு அணியும்-நார்த் ஈஸ்ட் அணியும், கோவா எஃப்சி அணியும்-மும்பை சிட்டி அணியும் மோதுகின்றன. வியாழக்கிழமை குவாஹாட்டியிலும், மார்ச் 11-இல் பெங்களூருவிலும் அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.
கோவா-மும்பை இடையே முதல் ஆட்டம் 9-இல் மும்பையிலும், இரண்டாவது சுற்று ஆட்டம் பட்ரோடாவில் 12-ஆம் தேதியும் நடக்கிறது.
17-இல் இறுதி ஆட்டம்: ஐஎஸ்எல் இறுதிச் சுற்று ஆட்டம் மும்பையில் வரும் 17-இல் நடைபெறுகிறது. இதில் வெல்லும் அணி புதிய சாம்பியனாகும். மேலும் அந்த அணி 2020 ஏஎப்சி கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களிலும் பங்கேற்க இயலும்.
நார்த் ஈஸ்ட்-பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. நார்த் ஈஸ்ட் அணியில் சிறந்த தற்காப்பு அரண் உள்ளது. மிட்பில்டில் ஓபெச்சே, ரொவ்லின் போர்ஜஸ் எதிரணிக்கு இடையூறை உண்டாக்குவர். அதே நேரத்தில் பெங்களூரு அணியில் சேத்ரி-மிகு என வலுவான முன்கள வரிசை உள்ளது. ஸ்ஸ்கோ ஹெர்னான்டஸýம் அற்புதமாக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com