இந்திய அணியின் நிர்வாகத்தில் இருந்திருந்தால் 4ஆவது வீரராக ரிஷப் பந்தை களமிறக்குமாறு பரிந்துரைத்திருப்பேன் என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண், காயம் காரணமாக போட்டியில் விளையாட முடியாமல் இருப்பதால், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் கூறியதாவது:
அணி நிர்வாகத்தில் இருந்திருந்தால் ரிஷப் பந்தை 4ஆவது வீரராக களத்தில் இறக்கியிருப்பேன்.
இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடக் கூடிய திறன் கொண்டவர் ரிஷப் பந்த். அவரை அணியில் சேர்க்க சூழ்நிலை பொறுத்தமாக உள்ளது.
இங்கிலாந்து நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். கே.எல்.ராகுல் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.