பிஃபா மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.
லீ ஹாவ்ரே நகரில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நார்வே அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஸ்காட், வொயிட், பிரான்ஸ் உள்ளிட்டோர் இங்கிலாந்து தரப்பில் கோலடித்தனர். நார்வே அணி வீராங்கனைகள் பலமாக போராடியும் கோலடிக்க முடியவில்லை. செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதியில் அமெரிக்கா அல்லது பிரான்ஸை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.