காலிறுதியில் நெதர்லாந்து, இத்தாலி: மகளிர் உலக கோப்பை கால்பந்து

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், காலிறுதி ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து-இத்தாலி அணிகள் மோதுகின்றன. இதில் நெதர்லாந்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இது முதல் முறையாகும். 
உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் நெதர்லாந்து அணியினர்.
உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் நெதர்லாந்து அணியினர்.


மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், காலிறுதி ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து-இத்தாலி அணிகள் மோதுகின்றன. இதில் நெதர்லாந்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இது முதல் முறையாகும். 
முன்னதாக நடைபெற்ற நாக் அவுட் ஆட்டங்களில், நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவையும் வீழ்த்தின. 
இதில் நெதர்லாந்து-ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டம் பிரான்ஸின் ரெனஸ் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் நெதர்லாந்து வீராங்கனை மார்டன்ஸ் 17-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, ஜப்பான் வீராங்கனை ஹசிகவா 43-ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். 
இறுதியாக 90-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மீண்டும் கோலடித்து நெதர்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார் மார்டென்ஸ். 
இதேபோல், பிரான்ஸின் மான்ட்பெலியர் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி-சீனா அணிகள் மோதின. இதில் சீனாவுக்கு கோல் வாய்ப்பு அளிக்காத இத்தாலியில், ஜியாசின்டி 15-ஆவது நிமிடத்திலும், கால்லி 49-ஆவது நிமிடத்திலும் கோலடித்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தனர். 
ஐரோப்பிய ஆதிக்கம்: இந்த உலகக் கோப்பை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ள 8 அணிகளில், அமெரிக்காவைத் தவிர இதர 7 அணிகளும் ஐரோப்பிய நாடுகளாகும். மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல்முறையாகும். 
முதல் முறை: அதேபோல், மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் தகுதி பெறாதது இது முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com