அரையிறுதி முனைப்பில் இ‌ந்​தி​யா​: மே‌.‌இ. தீவுகளு​டன் இ‌ன்று மோத‌ல்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. 
அரையிறுதி முனைப்பில் இ‌ந்​தி​யா​: மே‌.‌இ. தீவுகளு​டன் இ‌ன்று மோத‌ல்


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. 
அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ நெருங்கிவிட்ட இந்திய அணி, போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்வது எளிதான ஒன்றாக இருக்கலாம். ஆனால், இழப்பதற்கு இனி ஏதும் இல்லை என்ற நிலையில் ஆடும் மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவுக்கு சவால் அளிக்கும் பட்சத்தில், அது இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பை சற்று கடினமாக்கலாம். 
இந்திய அணியைப் பொருத்த வரையில், தோனியின் பேட்டிங் அணுகுமுறையை அணி நிர்வாகம் சற்று கவலையுடன் எதிர்நோக்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 52 பந்துகளில் 28 ரன்களே சேர்த்த அவரது பேட்டிங் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும் கேள்வி எழுப்பியிருந்தார். 
ஐபிஎல் போட்டிகளில் அடித்தாடும் தோனி, இந்தியாவுக்கான சர்வதேச போட்டிகளில், அதுவும் உலகக் கோப்பை போட்டியில் இவ்வாறு விளையாடுவது தொடர்பாக விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. எனவே, தோனியின் பேட்டிங் லைனில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக கேப்டன் கோலி-பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முடிவெடுக்க வேண்டியுள்ளது. 
அவரது இடத்தை கேதார் ஜாதவுக்கு கொடுக்க வாய்ப்பு இருக்கலாம். அதிரடியாக ஆடும் பாண்டியாவுக்கு தகுந்த பார்ட்னர்ஷிப் கிடைக்காவிட்டால் அவருக்கான பணிச்சுமை அதிகரிக்கும். ரிஷப் பந்தை தேர்வு செய்யும் பட்சத்தில், விஜய் சங்கரை கைவிட வேண்டியிருக்கும். எனவே, இந்திய அணி என்ன முடிவு மேற்கொள்ளும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. 
மறுபுறம், மேற்கிந்தியத் தீவுகளில் தொடைப் பகுதி காயம் காரணமாக ரஸ்ஸல் இல்லாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். பேட்டிங்கில் கெயில் ரன்கள் சேர்ப்பார் என நம்பலாம். நியூஸிலாந்துக்கு எதிராக விடாமல் போராடிய பிரத்னவெயிட் அணிக்கு மற்றொரு பலம். 
அந்த அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஷெல்டன் காட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். 


இன்றைய ஆட்டம்:
இந்தியா-மே.இ.தீவுகள்
இடம்: மான்செஸ்டர்
நேரம்: மதியம் 3 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com