ஃபீல்டிங்கில் கோட்டையைப் பிடித்த இந்தியாவும்! கோட்டை விடும் பாகிஸ்தானும்!

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த ஃபீல்டிங் அணியாக இந்தியா திகழ்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபீல்டிங்கில் கோட்டையைப் பிடித்த இந்தியாவும்! கோட்டை விடும் பாகிஸ்தானும்!

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த ஃபீல்டிங் அணியாக இந்தியா திகழ்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் இதுவரையிலான ஆட்டங்களின் அடிப்படையில் ஃபீல்டிங்கில் சிறந்த அணியாக இந்தியாவும், மோசமான அணியாக பாகிஸ்தானும் உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக யுவேந்திர சாஹல் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் மட்டும் ஒரேயொரு கேட்சை தவறவிட்டார். மற்றபடி இந்திய அணி 14 கேட்சுகளையும் பிடித்து அசத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி சுமார் 14 கேட்சுகளை கோட்டை விட்டுள்ளது. இது அந்த அணிக்கு ஏற்பட்ட கேட்சு வாய்ப்புகளில் 35 சதவீதமாகும்.

இதில் அதிர்ச்சிக்குரிய விதமாக இங்கிலாந்து அணி மோசமான ஃபீல்டிங் பட்டியலில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணி ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கு முன்னதாக வரை 12 கேட்சுகளை நழுவவிட்டனர். நியூஸிலாந்து அணி 9 கேட்சு வாய்ப்புகளை தவறவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com