லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை அள்ளிய ஆஸி. வேகங்கள்

வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளதாக கருதப்படும் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் அளித்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை அள்ளிய ஆஸி. வேகங்கள்

2019 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மேதின. இதில் 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. 

இதன்மூலம் கடந்த 1992 உலகக் கோப்பையில் இருந்து தற்போது வரையிலான உலகக் கோப்பை ஆட்டங்களில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றிச் சாதனையை தக்க வைத்துக்கொண்டது. 

இந்தப் போட்டியில் ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் அதிரடியாக ஆடி 100 ரன்கள் விளாசினார். அதுபோன்று பந்துவீச்சிலும் ஆஸி. அணி ஆதிக்கம் செலுத்தியது. தற்போதைய காலகட்டத்தில் மிக வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளதாக கருதப்படும் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் அளித்தது.

முன்னணி வீரரான மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்த மறுமுனையில் அபாரமாக பந்துவீசிய ஆஸி. அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஜேஸன் பெஹன்ட்ராஃப் 10 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் விவரம் பின்வருமாறு:

5/48 ஜி. கில்மௌர் v மேற்கந்திய தீவுகள் 1975
5/47 மைக்கெல் கேஸ்ப்ரோவிக்ஸ் v பாகிஸ்தான் 2004
5/41 பிரெட் லீ v இங்கிலாந்து 2005
5/49 பிரெட் லீ v இங்கிலாந்து 2009
5/43 ஜேஸன் பெஹன்ட்ராஃப் v இங்கிலாந்து 2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com