செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

2003, 2007-இல்ஆஸி. அணியைபோல் தற்போது இந்தியா ஆதிக்கம் செலுத்தும்:  அஸ்வின்

DIN | Published: 12th June 2019 01:07 AM


2003, 2007-இல் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது போல் தற்போதைய உலகக் கோப்பையில் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தும் என மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அஸ்வின் பவுண்டேஷன் அமைப்பை அவர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து உதவி செய்ய அஸ்வின் திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
சஹல், குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக தான் செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய போட்டியில் சஹல் சிறப்பாக வீசி வருகிறார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வெற்றிகளை நாம் பெற்றுள்ளோம். ஆப் ஸ்பின்னர்களுக்கு தற்போது வாய்ப்பில்லையே என கேட்டபோது, அவர் கூறுகையில், இந்த நிலை விரைவில் மாறும். வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளதால், இடதுகை ஸ்பின்னர்களும் ஏராளம் தேவைப்படுகின்றனர். குறுகிய ஓவர் ஆட்டங்களில் ஆப் ஸ்பின்னர்கள் தேவை குறைந்துள்ளது. அதே நேரம் ஐபிஎல் போட்டியில் நானும், ஹர்பஜனும் சிறப்பாக செயல்பட்டோம். கவுண்டி அணியான நாட்டிங்ஹாம்ஷயர் அணியில் ஆடுவதற்காக வரும் 23-ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறேன். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள பொருளாதார வசதியில்லாத குழந்தைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதி, நிதிவசதி செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட 8 இளம் வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள், ஊக்கத்தொகையை அஸ்வின் மனைவி ப்ரீத்தி வழங்கினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மே.இ.ஏ அணி பயிற்சி ஆட்டம் இந்தியா 200 ரன்கள் முன்னிலை
பயங்கரவாத மிரட்டல்: இந்திய அணிக்கு தீவிர பாதுகாப்பு
உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி: சாய் பிரணீத், பிரணாய் முன்னேற்றம்
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: முதலிடத்தை நோக்கி ஸ்மித்
சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் 11 ஆண்டுகள்