வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

டி வில்லியர்ஸின் கோரிக்கை மிகவும் தாமதமானது: தென்னாப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்

DIN | Published: 12th June 2019 01:05 AM


உலகக் கோப்பைக்கான அணியில் சேர்ந்து ஆட விரும்புவதாக டி வில்லியர்ஸ் முன்வைத்த கோரிக்கை மிகவும் தாமதமானது என தென்னாப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகளின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் முன்னணி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ்.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிக்கானஅணித் தேர்வுக்கு முன்னதாக தான் மீண்டும் ஆட விரும்புவதாக அணியின் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரை அணியில் சேர்க்க கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா மறுத்து விட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறியதாவது-
ஐபிஎல் போட்டிகள் மத்தியில், உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்படும் நாளுக்கு முன்பு தொலைபேசியில் வில்லியர்ஸ் தனது விருப்பம் குறித்து தெரிவித்தார். இது மிகவும் தாமதமான நேரமாகும் எனத் தெரிவித்தேன். அது வெறும் தொலைபேசி அழைப்பு தான். அணி பயிற்சியாளர், தேர்வாளர்களிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறினேன். 99.9 சதவீதம் அணியை மாற்றுவது மிகவும் காலம் கடந்து விட்டது எனக் கூறி விட்டனர்.
டி வில்லியர்ஸ் இல்லாதது உலகக் கோப்பையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா எனக் கேட்டபோது, பாதகமும் உள்ளது, சாதகமும் உள்ளது என்றார். இப்பிரச்னையில் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிய வேண்டும். வில்லியர்ஸ்-நானும் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்றார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: இந்தியா சாம்பியன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?
இந்திய  தேர்வுக் குழுத் தலைவராக கும்ப்ளே இருக்க வேண்டும்: விரேந்திர சேவாக்
புரோ கபடி லீக் போராடி தோற்றது தமிழ் தலைவாஸ்
உலக பாட்மிண்டன் பி.வி. சிந்து முன்னேற்றம்