திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

கோடை காலம் ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான்!

By Jesu Gnanaraj| DIN | Published: 10th June 2019 12:59 PM

 

கோடைகாலம் வந்துவிட்டாலே ஜெர்மனியர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவரையிலும் தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திக்கொண்டவர்கள் இப்போது தான் அந்த உடைகளிலிருந்து தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள். 

இந்த 3 மாதங்களைத்  தவறவிட்டால், அப்புறம் விட்டமின் டி-க்காக அடுத்தவருடம் வரை காத்திருக்க வேண்டும். அதனால் இந்த கோடை காலத்தில் பல விளையாட்டுப்  போட்டிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அதில் ஒன்று தான் சகதியில் சேற்றிலும் உருண்டு புரளும் விளையாட்டு.

ஜெர்மனியிலுள்ள ஆர்ன்பெர்க் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டில்  சுமார் 15,000 பேர் கலந்து கொண்டனர். 

போட்டியாளர்கள் சேறு, சகதி மற்றும் அழுக்கு நீர் என்று  20-க்கும் மேற்பட்ட தடைகளை கடந்து செல்லும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.

உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இந்த போட்டிக்கு இருப்பதால் இதுபோன்று இன்னும் 2 போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற உள்ளன. 

ஆக மொத்தத்தில் இந்த கோடை காலம் ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கவாஸ்கர் சாதனையைச் சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!
புரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் பர்தீப் நர்வால்
மழையால் கைவிடப்பட்டது இந்தியா-தென்னாப்பிரிக்க முதல் டி20
உலக ஆடவர் குத்துச்சண்டை: போராடி வென்றார் கவிந்தர் சிங்
ஆஷஸ்: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து