செய்திகள்

டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதில் பங்கு வகித்த ராஜ்புத், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம்!

31st Jul 2019 11:45 AM | எழில்

ADVERTISEMENT

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத், இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். 

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். அவர் மற்றும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களின் பணிக்காலம் மே.இ.தீவுகள் தொடர் வரை 45 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தோல்வியை அடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ சிஓஏ அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக ஜாம்பவான் கபில்தேவ், முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட், மகளிரணி கேப்டன் சாந்தா ரங்கசாமி தலைமையிலான ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. ஜூலை 30-ஆம் தேதி பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ரவிசாஸ்திரி மற்றும் தற்போதுள்ள பயிற்சியாளர்கள் நேர்காணலில் நேரடியாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தோனி தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியின் மேலாளராக இருந்தவர், லால்சந்த் ராஜ்புத். ஜிம்பாப்வே அணியின் தற்போதைய பயிற்சியாளராக உள்ள ராஜ்புத், இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கும் அஸ்ஸாம் மற்றும் மும்பை லீக் டி20 அணிகளுக்கும் இதற்கு முன்பு பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : Zimbabwe coach Lalchand Rajput Team India head coach's position
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT