செய்திகள்

லாஸ்கபோஸ் ஏடிபி: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரஜ்னேஷ்

31st Jul 2019 01:05 AM

ADVERTISEMENT


லாஸ்கபோஸ் ஏடிபி வேர்ல்ட் டூர் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய நம்பர் ஒன் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார்.
ஏடிபி தரவரிசையில் 90-ஆவது இடத்தில் உள்ள பிரஜ்னேஷ் 6-4, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் 67-ஆம் நிலை வீரர் ஜான் மில்மேனை (ஆஸி.) வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தைய) முன்னேறினார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய பிரஜ்னேஷ், இரண்டாவது செட்டை கோட்டை விட்டார். பின்னர் சுதாரித்து கொண்டு ஆடி மூன்றாவது செட்டை எளிதாக கைப்பற்றினார்.
அடுத்த சுற்றில் உலகின் 28-ஆம் நிலை வீரர் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதுகிறார் பிரஜ்னேஷ். இரட்டையர் பிரிவில் துவிஜ் சரண்-ஜோனத்தான் இணை நான்காம் நிலை இணையான பென்-ஜான் இணையை எதிர்கொள்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT