செய்திகள்

மாநில டேக்வாண்டோ: வேலூர், நீலகிரி மாவட்ட அணிகள் சாம்பியன்

29th Jul 2019 01:25 AM

ADVERTISEMENT

 

தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வேலூர்,  நீலகிரி மாவட்ட அணிகள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றன.

தினமணி நாளிதழ், தருமபுரி மாவட்ட டேக்வாண்டோ சங்கம் ஆகியவை இணைந்து தருமபுரி கமலம் இண்டர்நேஷனல் பள்ளியில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியை நடத்தின.  கடந்த 26-ஆம் தேதி தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த போட்டியில்,  மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சப்-ஜூனியர், கேடட் மற்றும் பும்சே ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.  சப்-ஜூனியருக்கான ஆண்கள் பிரிவில் வேலூர் மாவட்ட அணி 23 புள்ளிகளையும், நீலகிரி மாவட்ட அணி 22 புள்ளிகளையும், சென்னை அணி 19 புள்ளிகளையும் பெற்றன. அதிக புள்ளிகளைப் பெற்ற வேலூர் மாவட்ட அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

ADVERTISEMENT

சப்-ஜூனியர் மாணவிகளுக்கான பிரிவில் நீலகிரி மாவட்ட அணி 48 புள்ளிகளையும், சென்னை மாவட்ட அணி 26 புள்ளிகளையும், சேலம் மாவட்ட அணி 22 புள்ளிகளையும் பெற்றன. இதையடுத்து, 48 புள்ளிகளைப் பெற்ற நீலகிரி மாவட்டம் மாணவிகள் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

மாணவிகளுக்கான கேடட் பிரிவு போட்டியில் நீலகிரி மாவட்ட அணி 21 புள்ளிகளையும்,  திருவள்ளூர் மாவட்ட அணி 20 புள்ளிகளையும்,  கோவை மாவட்ட அணி 19 புள்ளிகளையும் பெற்றன. அதிக புள்ளிகளைப் பெற்ற நீலகிரி மாவட்ட அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

மாணவர்களுக்கான கேடட் பிரிவில் நீலகிரி மாவட்ட அணி 17 புள்ளிகளையும், சேலம் மாவட்ட அணி 15 புள்ளிகளையும்,  கோயம்புத்தூர் மாவட்ட அணி 13 புள்ளிகளையும் பெற்றன.  

அதிக புள்ளிகளான 17 புள்ளிகளைப் பெற்ற நீலகிரி மாவட்ட அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.  

பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளி,  வெண்கலப் பதக்கங்களை வென்ற மாணவ,  மாணவிகளுக்கு பதக்கங்கள்,  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  தங்கப் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT