செய்திகள்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: சென்னை வெற்றி

29th Jul 2019 02:11 AM

ADVERTISEMENT

 

 

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புணேரி பல்தான் அணியை 10-5 என்ற கேம் கணக்கில் வீழ்த்தியது சென்னை லயன்ஸ் அணி.

இப்போட்டியின் 3-ஆவது சீசன் போட்டிகள் புது தில்லியில் நடைபெற்று வருகின்றன. தொடக்க ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய சென்னை இதில் ஆதிக்கம் செலுத்தியது. மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னையின் பெட்ரிஸô சோலிஜா 3-0 என புணேரியின் அஹியிகா முகர்ஜியை வென்றார். மற்றொரு ஆட்டத்தில் புணேயின் சபேன் வின்டர் 2-1 என சென்னையின் மதுரிகாவை வென்றார்.

ADVERTISEMENT

ஆடவர் ஒற்றையர் பிரிவில் சென்னை வீரர் டியாகோ அபோலினியா 2-1 என ஹர்மீத் தேசாயை வென்றார். மற்றொரு ஆட்டத்தில் சென்னையின் சரத் கமல் 1-2 என சுவாங் யுவானிடம் தோற்றார். கலப்பு இரட்டையரில் சென்னையின் சோலிஜா, சரத் இணை வென்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT