செய்திகள்

யு-19 ஒருநாள் தொடர்: இங்கிலாந்து வெற்றி

27th Jul 2019 02:49 AM

ADVERTISEMENT


இங்கிலாந்தில் நடைபெறும் பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 48.4 ஓவரகளில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து வென்றது. 
இந்திய அணியில் அதிகபட்சமாக திவ்யான்ஷ் சக்ஸேனா 3 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஹமிதுல்லா, ஆல்ட்ரிட்ஜ் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேக் ஹேனஸ் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 89 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் சுபாங் ஹெக்டே 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT