செய்திகள்

புரோ கபடி: குஜராத் அபார வெற்றி

27th Jul 2019 01:05 AM

ADVERTISEMENT


புரோ கபடி லீக் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 44-19 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியை அபார வெற்றி கண்டது. 
இந்த இரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் குஜராத் 2 வெற்றிகளுடன் முதலிடத்திலும், உத்தரப் பிரதேச அணி 2 தோல்விகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது. 
ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் 23 ரைடு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள், 1 உதிரி புள்ளி பெற்றது. உத்தரப் பிரதேசம் 12 ரைடு புள்ளிகள், 5 டேக்கிள் புள்ளிகள், 2 உதிரி புள்ளி பெற்றது. 
குஜராத் அணியில் அதிகபட்சமாக ரைடர் ரோஹித் குலியா 10 புள்ளிகளும், தடுப்பாட்ட வீரர் பர்வேஷ் பைன்ஸ்வால் 6 புள்ளிகளும் வென்றனர். உத்தரப் பிரதேச அணியில் அதிகபட்சமாக ரைடர் ஸ்ரீகாந்த் ஜாதவ் 5 புள்ளிகளும், தடுப்பாட்ட வீரர் நிதேஷ் குமார் 2 புள்ளிகளும் வென்றனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT