செய்திகள்

ஏ அணிகளிடையேயான டெஸ்ட்:  இந்தியா 71 ரன்கள் முன்னிலை

27th Jul 2019 01:03 AM

ADVERTISEMENT


மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி 2-ஆம் நாள் முடிவில் 99 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. 
மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்திய அணி தற்போது 71 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் விருத்திமான் சாஹா 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். மார்கண்டே அவரோடு களம் காண இருக்கிறார். 
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 66.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராகீம் கார்ன்வால் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 59 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஷாபாஸ் நதீம் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். 
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, வியாழக்கிழமை முடிவில் 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. 
தொடர்ந்து ஆடிய இந்திய  ஏ  அணி 2-ஆம் நாள் முடிவில் 99 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. விருத்திமான் சாஹா-ஷிவம் துபே கூட்டணி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.  இந்தக் கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தது. 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்களுக்கு வீழ்ந்தார் ஷிவம் துபே. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் மிகெல் கம்மின்ஸ் 3 விக்கெட் சாய்த்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT