மே.இ.தீவுகள் தொடருக்கான டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகள் அறிவிப்பு: டி20 அணியில் புதுமுகம் ராகுல் சாஹர்

மே.இ.தீவுகள் தொடருக்கான இந்திய டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மே.இ.தீவுகள் தொடருக்கான டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகள் அறிவிப்பு: டி20 அணியில் புதுமுகம் ராகுல் சாஹர்

மே.இ.தீவுகள் தொடருக்கான இந்திய டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மே.இ.தீவுகளுடன் தலா 3 டி20, ஒருநாள் ஆட்டங்கள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 ஆட்டங்களில் இந்தியா ஆட உள்ளது.
தோனி விவகாரம்: உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இந்திய அணி தோல்வியுற்று வெளியேறியது. இந்நிலையில் குறுகிய ஓவர்கள் போட்டிகளில் இருந்து மூத்த வீரர் தோனி ஓய்வு பெற வேண்டும் என அழுத்தம் தரப்பட்டது. எனினும் தனது ஓய்வு குறித்து தோனி தான் முடிவு செய்வார் என பல்வேறு தரப்பினர் கூறினர். இந்நிலையில் ராணுவத்தில் இணைந்து  2 மாதங்கள் சேவை செய்ய உள்ளதால், மே.இ.தீவுகள் தொடரில் தான் பங்கேற்கவில்லை என பிசிசிஐக்கு தெரிவித்து விட்டார் தோனி.
தேர்வுக் குழுக் கூட்டம்: இதற்கிடையே இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்எஸ்கே. பிரசாத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கூடியது. கேப்டன் கோலி, தேர்வுக் குழு உறுப்பினர்கள் 5 பேர் பங்கேற்றனர்.
மீண்டும் தவன்:  உலகக் கோப்பை போட்டியில் ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் கம்மின்ஸ் பந்துவீச்சில் இடது பெருவிரலில் காயமடைந்த ஷிகர் தவன், தற்போது குணமடைந்து மீண்டும் டி20, ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 
பும்ரா, பாண்டியாவுக்கு ஓய்வு:
தொடர்ந்து ஆஸி. நியூஸி தொடர்கள், உலகக் கோப்பையில் ஓய்வின்றி ஆடி வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. பும்ரா, டெஸ்ட் அணியில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 அணியில் புதுமுகங்கள்: டி 20 அணியில் புதிய இளம் வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். பந்துவீச்சாளர்கள் நவ்தீப் சைனி, ராகுல் சஹார், ஷிரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் புதுமுகமாக ராகுல் சாஹர் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் ராகுல் சஹார் சிறப்பாக பந்துவீசியதால் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது.
இந்திய ஏ அணியின் செயல்பாடும் அணித் தேர்வில் கருத்தில் கொள்ளப்பட்டது. 
டெஸ்ட் அணியில் சாஹா:  காயமடைந்த நிலையில் ஓரம் கட்டப்பட்டிருந்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா மீண்டும் குணமடைந்ததால், டெஸ்ட் அணியில் 2-ஆம் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் அதில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக் நீக்கம்: உலகக் கோப்பை அணியில் இடம் பெற்று சரிவர ஆடாத தினேஷ் கார்த்திக் மே.இ.தீவுகள் தொடரில் சேர்க்கப்படவில்லை. விஜய் சங்கரும் காயமுற்றதால், அவரது பெயரும் பரிசீலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 தொடர்: ஆக.3-முதல் ஆட்டம், போர்ட் லாடர்ஹில், ஆக. 4-இரண்டாவது ஆட்டம்-போர்ட் லாடர்ஹில், ஆக. 6- மூன்றாவது ஆட்ட்-கயானா.
ஒருநாள் தொடர்: ஆக. 8-முதல் ஆட்டம், கயானா, ஆக. 11, இரண்டாம் ஆட்டம்-டிரினிடாட்,  ஆக. 13-மூன்றாவது ஆட்டம்-டிரினிடாட்.
டெஸ்ட் தொடர்: ஆக. 22-26 வரை: முதல் டெஸ்ட், ஆண்டிகுவா, ஆக. 30 முதல் செப். 3 வரை-இரண்டாவது டெஸ்ட், ஜமைக்கா.

டி20 தொடருக்கான இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), 
ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், ஷிரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), க்ருணால் பாண்டியா,
ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர்,
புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி.

ஒருநாள் தொடருக்கான அணி

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்),
ஷகர் தவன், லோகேஷ் ராகுல், ஷிரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ்,
யுஜவேந்திர சஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி,
புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

டெஸ்ட் தொடருக்கான அணி

விராட் கோலி (கேப்டன்), அஹிங்கிய ரஹானே (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com