அம்பதி ராயுடுவிடம் பாரபட்சம் காட்டவில்லை

அம்பதி ராயுடுவிடம் நாங்கள் எந்த பாரபட்சமும் காண்பிக்கவில்லை என பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே. பிரசாத் கூறியுள்ளார்.
அம்பதி ராயுடுவிடம் பாரபட்சம் காட்டவில்லை

அம்பதி ராயுடுவிடம் நாங்கள் எந்த பாரபட்சமும் காண்பிக்கவில்லை என பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே. பிரசாத் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆஸி, நியூஸிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் இடம் பெற்ற ஆல்ரவுண்டர் அம்பதி ராயுடு, ஒரளவே ஆடினார். 
இந்நிலையில் அவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நான்காம் நிலை பேட்ஸ்மேனாக சேர்க்கப்படுவார் என கருதப்பட்டது.
கேப்டன் கோலியும், அப்போது ராயுடுவுக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்திருந்தார். 
ஆனால் அவர் அணியில் சேர்க்கப்படாமல், தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார்.  இதனால் சர்ச்சை எழுந்தது. 
அப்போது தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத் கூறுகையில், பீல்டிங், பவுலிங், பேட்டிங் என 3 அம்சங்களிலும் (3-டி) ஆடக்கூடியவர் விஜய்சங்கர் எனக் கூறியிருந்தார்.  
இதுதொடர்பாக தனது சுட்டுரையிலும் (டுவிட்டர்) உலகக் கோப்பையை காண புதிதாக 3-டி கண் கண்ணாடி வாங்க ஆர்டர் தந்துள்ளேன் என அம்பதி ராயுடு பதிவிட்டிருந்தார். 
மயங்க் அகர்வால், ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் இடம் பெற்ற நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்தார்.
இதுதொடர்பாக பிரசாத் கூறியதாவது: அம்பதி ராயுடுவின் டுவிட் அந்த நேரத்தில் பொருத்தமாக பதிவிடப்பட்டிருந்தது. 
வீரர்கள் வரிசை, சேர்க்கை அடிப்படையில் தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ராயுடுவுக்கு எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை.
ராகுல் காயமடைந்தார், அவருக்கு பதிலாக தொடக்க வீரர் தேவை என்பதால், மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார். அப்போது சில வீரர்கள் பார்மில் இல்லை. 
விஜய் சங்கர், பந்த், அகர்வால் தேர்வில் எந்த சலுகையும் காட்டப்படவில்லை. அதே நேரம் ராயுடுவுக்கும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என்றார் பிரசாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com