செய்திகள்

ஹிமா தாஸ் 5-ஆவது தங்கம்

22nd Jul 2019 01:45 AM

ADVERTISEMENT

செக்.குடியரசின் பிராக் நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய நட்சத்திரம் ஹிமா தாஸ், ஓரே மாதத்தில் 5-ஆவது தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
பி.டி. உஷாவுக்கு அடுத்து தடகள ஓட்டப்பந்தயத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருபவர் அஸ்ஸாமின் இளம் வீராங்கனை ஹிமா தாஸ். சனிக்கிழமை இரவு பிராகில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் 52.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். 
கடந்த புதன்கிழமை தபோர் போட்டியில் 200 மீ.இல் தங்கம் வென்றார். மேலும் கிளாட்னோ போட்டி, குண்டோ தடகளப் போட்டி, போன்ஸான் தடகள கிராண்ட்ப்ரீ என சர்வதேச போட்டிகள் என மொத்தம் 5 தங்கம் வென்றுள்ளார் அவர். 
400 மீ தடைதாண்டுதலில் 49.96 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார் எம்.பி.ஜபீர். ஆடவர் பிரிவில் முகமது அனாஸ் 200 மீ. ஓட்டத்தில் 20.93  விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். கிளாட்னோ போட்டியிலும் 400 மீ. இல் தங்கம் வென்றிருந்தார் அனாஸ். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT