செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

புரோ கபடி: தமிழ்த் தலைவாஸ், குஜராத் அணிகள் வெற்றி

DIN | Published: 22nd July 2019 01:42 AM

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு புரோ கபடி சீசன் 7 போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ûஸ 42-25 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குஜராஜ் பார்ச்சுன் ஜெயன்ஸ்ட்.
பெங்களூரு நட்சத்திர வீரர்கள் ரோஹித் குமார், பவன் செஹ்ராவத்தை ஆடவிடாமல் குஜராத் வீரர்கள் திறமையாக மடக்கினர். 
குஜராத்தின் தற்காப்பு அரண் மிகவும் வலுவாக இருந்தது. பெங்களூரு  வீரர் பவன் செஹ்ராவத் 8 புள்ளிகளை சேர்த்தார். 
குஜராத் தரப்பில் சுனில்குமார், சச்சின், மோரே, சோனு ஆகியோர் சிறப்பாக ஆடினர். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 21-10 என குஜராத் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 39-26 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி கடைசி வரை அதை தக்க வைத்தனர். ராகுல் செளதரி அபாரமாக ஆடி சூப்பர் 10 புள்ளிகளை குவித்தார். ஆட்ட நாயகன் விருதையும் வென்றார் ராகுல்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சீனாவின் லின் டானைத் தோற்கடித்தார் இந்தியாவின் பிரணாய்!
ஜடேஜா உள்ளிட்ட 19 வீரர்களுக்கு அர்ஜூனா விருது!
தீபா மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது!
இந்தியாவுக்குத் திரும்ப வேண்டாம்: இந்திய டெஸ்ட் அணியுடன் இணைந்து பயிற்சியில் பங்குபெற வேகப்பந்துவீச்சாளர் சைனிக்கு பிசிசிஐ கட்டளை!
பயிற்சி ஆட்டம் டிரா: அரை சதமெடுத்த ரஹானே, விஹாரி!