செய்திகள்

இந்தோனேஷிய ஓபன் இறுதிச் சுற்று: சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம்

22nd Jul 2019 01:44 AM

ADVERTISEMENT

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகேன் எமகுச்சியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெள்ளி வென்றார் பி.வி.சிந்து.
ஜகார்த்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் சிந்து கண்டிப்பாக பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 15-21, 16-21 என்ற கேம் கணக்கில் எமகுச்சியிடம் தோல்வியடைந்தார் சிந்து. 
இருவரும் மோதிய 15 ஆட்டங்களில் சிந்து பெறும் 5-ஆவது தோல்வி இதுவாகும். கடந்த 7 மாதங்களாக ஒரு போட்டியில் கூட பட்டம் வெல்லாத நிலையில் சிந்து இதில் கண்டிப்பாக பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிராசையானது. உலக சாம்பியன் போட்டிகள், ஆசியப் போட்டி, காமன்வெல்த், தாய்லாந்து ஓபன், இந்தியா ஓபன் போட்டிகளில் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கமே வென்றார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய எமகுச்சி 51 நிமிடங்களில் ஆட்டத்தை நிறைவு செய்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT