திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஷூப்மன் கில் எங்கே? இந்திய அணித் தேர்வு மீது ரசிகர்கள் கோபம்

DIN | Published: 21st July 2019 07:08 PM


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கு இளம் வீரரான ஷூப்மன் கில்லை சேர்க்காதது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் விளையாடப்போவதில்லை என்று தோனி ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அதேசமயம், நம்பர் -1 பந்துவீச்சாளரான பூம்ராவும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை.  

இதில், இளம் வீரரான ஷூப்மன் கில் மூன்று ரக கிரிக்கெட் தொடரிலும் சேர்க்கப்படாதது ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் 'ஏ' அணிக்கு எதிராக அண்மையில் நடந்து முடிந்த தொடரில் 3 இன்னிங்ஸில் சராசரி 49.67 உடன் 149 ரன்கள் எடுத்தார் கில். எனினும், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. 

ஷூப்மன் கில் தேர்வு செய்யாதது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், "நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் இல்லாததால், ஷூப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவருடைய வாய்ப்புக்கு அவர் காத்திருக்க வேண்டும்" என்றார்.

ஷூப்மன் கில் சேர்க்கப்படாததற்கு ரசிகர்கள் டிவிட்டரில் கடுமையாக சாடி வருகின்றனர்.

 

 

 

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

3-வது டெஸ்டிலும் ஆண்டர்சன் இடம்பெறவில்லை: 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி தரவரிசை: அதிகப் புள்ளிகளைப் பெற்று ஆஸி. பந்துவீச்சாளர் சாதனை!
ஆக்ரோஷமான பந்துவீச்சால் அறிமுக டெஸ்டிலேயே கிரிக்கெட் உலகின் கவனம் ஈர்த்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர்! (விடியோ)
'சூப்பர்மேன்' டென்லியின் சூப்பர் கேட்ச் விடியோ!
இதர அணிகள் தங்கள் தரத்தை உயர்த்துவது எப்போது? சௌரவ் கங்குலி