ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு தடை: வேலைவாய்ப்பை இழந்ததாக வீரர்கள் மன வேதனை

ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் மன வேதனையை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 
ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு தடை: வேலைவாய்ப்பை இழந்ததாக வீரர்கள் மன வேதனை

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை விதித்து ஐசிசி வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையீடு இருப்பதாகக் கூறி லண்டனில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் மன வேதனையை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

ஒரு முடிவால் அந்நியர்களாய் உடைந்த அணி
ஒரு முடிவால் ஏற்பட்டுள்ள வேலையாப்பின்மை
ஒரு முடிவால் கேள்விக்குரியதான பல குடும்பங்களின் எதிர்காலம்
ஒரு முடிவால் முடிவடைந்த பலரது கிரிக்கெட் வாழ்க்கை
இப்படியொரு சூழலில் நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்க விரும்பவில்லை

என்று ஜிம்பாப்வே அணியின் மூத்த வீரர் சிக்கந்தர் ராசா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணியின் முன்னணி நட்சத்திர வீரரான பிரெண்டன் டெய்லர் பதிவிட்டதாவது:

ஜிம்பாப்வே கிரிக்கெட் மீதான ஐசிசி-யின் இந்த நடவடிக்கை மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கிரிக்கெட் வாரியத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை. ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த நேர்மையான வீரர்கள், பயிற்சியாளர்கள், மைதான பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட கிரிக்கெட் வாரியத்தைச் சார்ந்தவர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குரியதாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com