இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்: கபில் தேவ் தலைமையிலான குழு தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரை கபில் தேவ் தலைமையிலான இடைக்காலக் குழு (அட்ஹாக் கமிட்டி) தேர்வு செய்யும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் கிரிக்கெட் நிர்வாகக் குழு
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்: கபில் தேவ் தலைமையிலான குழு தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரை கபில் தேவ் தலைமையிலான இடைக்காலக் குழு (அட்ஹாக் கமிட்டி) தேர்வு செய்யும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் கிரிக்கெட் நிர்வாகக் குழு (சிஓஏ) மீண்டும் பிளவுபடும் அபாயம் உருவாகியுள்ளது.

இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியது.

இதற்கிடையே அணியின் உடலியக்கவியல் நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோர் விலகி விட்டனர். தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் பாங்கர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு மே.இ.தீவுகள் தொடர் வரை 45 நாள்கள் பணி நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.

புதிய பயிற்சியாளர்கள் தேர்வு: இதற்கிடையே தலைமை பயிற்சியாளர் உள்பட அணியின் இதர பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ சிஓஏ அறிவித்துள்ளது. வரும் 30-ஆம் தேதி இதற்கு கடைசி நாளாகும். 

மகளிர் அணி பயிற்சியாளர்: கடந்த டிசம்பர் மாதம் கபில் தேவ் தலைமையில் உறுப்பினர்கள் அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு மகளிர் அணிக்கு டபிள்யு வி.ராமனை பயிற்சியாளராக தேர்வு செய்தது. அப்போது சிஓஏவில் வினோத் ராய் மற்றும் டயானா எடுல்ஜி ஆகியோர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்த நிலையில், மகளிர் அணி பயிற்சியாளர் விவகாரத்தில் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு தான் இந்த விவகாரத்தை கையாள அதிகாரம் பெற்றது என எடுல்ஜி கூறியிருந்தார். அதன் பின் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ரவி தோக்டே மூன்றாவது உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 

இரட்டை ஆதாய பதவி புகார்: சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் மீது இரட்டை ஆதாய பதவி வகிப்பதாக புகார் எழுந்துள்ளது. இப்பிரச்னையில் சிஓஏ எந்த முடிவும் எடுக்கவில்லை.

அதே நேரம் கபில் தேவ், சாந்தா ரங்கசாமி ஆகியோர் மீதும் இதே புகார் எழுந்துள்ளது. பிசிசிஐ புதிய சட்டவரையறையின்படி வீரர்கள் சங்கத்தை உருவாக்கியதில் இருவருக்கும் பங்குள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் புதிய பயிற்சியாளர் நியமனத்தில் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com