செய்திகள்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்தியா புதிய சாதனை

16th Jul 2019 01:05 AM

ADVERTISEMENT


ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றது இந்திய அணி.
ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் திங்கள்கிழமை மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவன் 251.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மற்றொரு வீராங்கனை மெஹுலி கோஷ் 250.2 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார். பிரான்ஸின் முல்லர் வெண்கலம் வென்றார்.
இதே பிரிவு அணிகள் போட்டியில் இந்தியாவின் இளவேனில்-மெஹுலி-ஷிரேயா அகர்வால் ஆகியோர் அடங்கிய அணி புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றது.
இப்போட்டியில் இதுவரை 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலத்துடன் 14 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
 2 தங்கம் உள்பட 6 பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT