செய்திகள்

4-ஆம் நிலை பேட்ஸ்மேன் இடத்தை நிரப்ப சரியாக திட்டமிடவில்லை

15th Jul 2019 02:25 AM

ADVERTISEMENT

நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்துக்கு அணி நிர்வாகம் சரியாக திட்டமிடவில்லை என முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் சாடியுள்ளார்.
 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் நியூஸிலாந்துடன் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா. தொடக்க வரிசை சரிந்த நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியை சரிவில் இருந்து மீட்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்து விட்டது.
 நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தில் எந்த வீரரும் நிலைத்து ஆடாததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓராண்டாக பல்வேறு வீரர்கள் மாற்றப்பட்டும். அவர்களுக்கு உரிய நம்பிக்கை தரப்படவில்லை.
 முன்பு இந்திய அணியில் நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கி 2 உலகக் கோப்பை போட்டிகளில் வெல்ல உதவிய யுவராஜ் சிங் கூறியதாவது-
 முக்கியமான இந்த பேட்டிங் இடத்தை நிரப்ப அணி நிர்வாகம் சரிவர செயல்படவில்லை. எந்த வீரரை ஆவது வளர்க்காமல் மெத்தனமாக இருந்து விட்டனர். நியூஸிலாந்துக்கு எதிராக உரியமுறையில் திட்டமிடவில்லை.
 அம்பதி ராயுடுவுக்கு உரிய வகையில் வாய்ப்பு தரவில்லை. ஒரு தொடரில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவரை புறக்கணித்தனர். நியூஸிலாந்து தொடரில் அவவர் நன்றாக ஆடினார். 3 ஆட்டங்களில் சரியாக ஆடாததால் அவரை விலக்கி விட்டனர். பின்னர் பந்த்தையும் தேர்வு செய்து நீக்கி விட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் நான்காம் நிலை பேட்ஸ்மேன் முக்கியமானதாகும். ஒரு வீரர் அதில் ஆடினால், அவரை நாம் ஆதரவு தர வேண்டும்.
 ரோஹித், கோலி விரைவாக அவுட்டாகி விட்டால், நான்காம் நிலை பேட்ஸ்மேன் தான் ஆட வேண்டும். உறுதியாக ஆடக்கூடிய வீரரை உருவாக்க வேண்டும். ராயுடுவுக்கு ஏற்பட நிலைமைக்கு வருந்துகிறேன். மொத்த சூழலையும் அணி நிர்வாகம் ûகாண்டது கண்டனத்துக்குரியது என்றார் யுவராஜ்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT