துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்று வரும் யாசர்டோகு சர்வதேச மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட்.
மகளிர் 53 கிலோ பிரிவில் ரஷிய வீராங்கனை ஏக்டெரினாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 சுற்றுகளில் 2 சுற்றுக்களை வென்ற வினேஷ் போகட் தங்கம் வென்றார். கடந்த வாரம் ஸ்பெயினில் நடைபெற்ற கிராண்ட்ப்ரீ போட்டியில் இதே ரஷிய வீராங்கனையை 9-5 என வீழ்த்தி தங்கம் வென்றிருந்தார் வினேஷ்.
மற்ற வீராங்கனைகளான திவ்யா காக்ரண், பூஜா தண்டா, சாக்ஷி மாலிக், ஆகியோர் தோல்வியுற்றனர்.
ஆடவர் பிரிவில் 61 கிலோ ஆடவர் பிரிவில் ராகுல் அவாரே 4-1 என புள்ளிக் கணக்கில் துருக்கியின் முனிரை வீழ்த்தி தங்கம் வென்றார். 86 கிலோ பிரிவில் தீபக் புனியா வெள்ளி வென்றார். 125 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார் சுமித்,