லண்டனில் நடைபெற்ற 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் 12 ஆண்டுகள் சாதனையை முறியடித்தார் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன்.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 30 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறிய கேன் வில்லியம்ஸன், ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையை 578 ரன்கள் எடுத்து முறியடித்தார்.
இதற்கு முன்பு இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே 2007-இல் 548 ரன்களை குவித்திருந்தார். அவருக்கு அடுத்து ரிக்கி பாண்டிங் 539 (2007), ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) 507 (2019) ரன்களுடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்த உலகக் கோப்பையில் தலா 2 சதம், அரை சதங்களுடன் தனது அணியை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றார் கேன் வில்லியம்ஸன். இங்கிலாந்துக்கு எதிராக முதலில் ஆடிய நியூஸி 241/8 ரன்களை எடுத்தது.
2019 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார் கேன் வில்லியம்ஸன்.