செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஹலேப்

12th Jul 2019 01:11 AM

ADVERTISEMENT


விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹலேப் தகுதி பெற்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதிச் சுற்று முடிந்து, தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனாவும், விட்டோலினாவும் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஹலேப் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் விட்டோலினாவை வீழ்த்தினார் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனாவும்-ஸ்டிர்கோவும் மோதினர்.
நடால்-பெடரர் அரையிறுதி மோதல்: மேலும் வெள்ளிக்கிழமை முதல் அரையிறுதியில் ஜோகோவிச்-பட்டிஸ்டுவா அகுட் மோதுகின்றனர். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடால்-பெடரர் மோதவுள்ளனர். விம்பிள்டனில் தனது 100-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ள பெடரர், 9-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். அதே நேரத்தில் நடாலும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிரமாக உள்ளார்.களிமண் தரை மன்னனும், புல்தரை மன்னனும் மோதவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறுதிச் சுற்றில் செரீனா: விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்தார் செரீனா வில்லியம்ஸ். வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதியில் அவர் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டிர்கோவாவை வீழ்த்தினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT