செய்திகள்

யுஎஸ் ஓபன் பாட்மிண்டன்: லக்ஷயா, பிரணாய், செளரவ் முன்னேற்றம்

12th Jul 2019 01:09 AM

ADVERTISEMENT


அமெரிக்காவின் ஃபுல்லர்டன் நகரில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் 2-ஆவது சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் லக்ஷயா சென், பிரணாய், செளரவ் வர்மா முன்னேறியுள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டங்களில் இளம் வீரர் லக்ஷயா சென் 21-11, 21-18 என்ற கேம் கணக்கில் மூத்த வீரர் பாருபல்லி காஷ்யப்பை அதிர்ச்சி தோல்வியுறச் செய்தார். செளரவ் வர்மா 21-23, 21-15, 22-20 என்ற கேம் கணக்கில் இங்கிலாந்தின் டோபி பென்டியை வீழ்த்தினார்.
எச்எஸ். பிரணாய் 21-23, 24-22, 21-18 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் யு இகாரஷியை வீழ்த்தினார்.
ஏனைய இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், மகளிர் பிரிவில் கிருஷ்ணபிரியா கூடாரவல்லி, அருணா பிரபுதேசாய் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT