முதல் உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றும் தீவிரத்தில் இங்கிலாந்து: அரையிறுதியில் இன்று ஆஸி.யுடன் மோதல்

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வென்று இங்கிலாந்து தனது முதல் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல் உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றும் தீவிரத்தில் இங்கிலாந்து: அரையிறுதியில் இன்று ஆஸி.யுடன் மோதல்


நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வென்று இங்கிலாந்து தனது முதல் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பர்மிங்ஹாம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையே நடைபெறுகிறது. 
ஆஸ்திரேலியா 9 ஆட்டங்களில் 7 வெற்றி, 2 தோல்வி என 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 
பட்டியலில் முதலிடத்தை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.  இதனால் 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 
அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என நினைத்த ஆஸி. அணியின் நோக்கம் நிறைவேறாமல் போனது.
6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும், முதன்முறையாக பட்டத்தை வெல்லும் தீவிரத்தில் இங்கிலாந்தும் களமிறங்குகின்றன.
காயங்களால் ஆஸி. அணி அவதி: ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வரிசை வீரர் உஸ்மான் காஜா, ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் காயத்தால் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வேட், ஆல்ரவுண்டர் மிச் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளனர். 
ஆஸி.க்கு ராசியில்லாத எட்ஜ்பாஸ்டன் மைதானம்: பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானம், இங்கிலாந்துக்கு சாதகமாகவும், அதே நேரம் ஆஸ்திரேலிய அணிக்கு ராசியில்லாத மைதானமாகவும் திகழ்கிறது. குறிப்பாக கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் ஆஸி.க்கு எதிராக ஒருநாள் ஆட்டங்களில் இங்கிலாந்து தோல்வியே கண்டதில்லை. இந்த மரபை ஆஸி. மாற்ற போராடும்.
பேட்டிங்: ஆஸி. அணியில் கேப்டன் பின்ச், வார்னர், ஸ்மித், கம்மின்ஸ், அலெக்ஸ் கரே உள்ளிட்டோர் எத்தகைய சூழலிலும் சிறப்பாக பேட்டிங் செய்கின்றனர்.
உலகக் கோப்பையில் ஆஸி.-இங்கிலாந்து நேருக்கு நேர் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 6 முறையும், இங்கிலாந்து 2 முறையும் வென்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com