செய்திகள்

ஜாவித் மியான்தத்தின் 27 வருட சாதனை தகர்ப்பு!

6th Jul 2019 12:21 PM | Raghavendran

ADVERTISEMENT

 

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னணி வீரர் ஜாவித் மியான்தத்தின் 27 வருட உலகக் கோப்பை சாதனையை இளம் நட்சத்திரம் பாபர் அசாம் முறியடித்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டினார். இருப்பினும் வெறும் 4 ரன்களில் உலகக் கோப்பையில் 2-ஆவது சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ADVERTISEMENT

முன்னதாக, 1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான ஜாவித் மியான்தத், 437 ரன்கள் குவித்தார். இதுவே உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரரின் தனிப்பட்ட மொத்த ரன்களாக இருந்து வந்தது. 

இந்நிலையில், 2019 உலகக் கோப்பையில் இளம் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 474 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற மியான்தத் படைத்திருந்த சாதனையை 27 வருடங்களுக்குப் பிறகு முறியடித்துள்ளார். 368 ரன்களுடன் சயீத் அன்வர் 3-ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT