செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் கெர்பர் அதிர்ச்சித் தோல்வி

6th Jul 2019 01:15 AM

ADVERTISEMENT


நாக் அவுட் சுற்றில் தி விஜ் சரண்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் நாக் அவுட் சுற்றுக்கு இந்தியாவின் தி விஜ் சரண் முன்னேறினார். பிரேசிலின் மார்செலோ டெமோலைனர்-சரண் இணை ஏறக்குறைய 3 மணி நேரம் போராடி சாண்டர்-ஜோர்டான் இணை 7-6 5-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். கடந்த ஆண்டு காலிறுதிக்கு முன்னேறி இருந்தார் சரண்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர் கெவின் ஆண்டர்சன் 4-6, 3-6, 6-7 என்ற செட் கணக்கில் பெல்லாவிடம் தோல்வியுற்றார். மற்றொரு ஆட்டத்திர் கச்சனோவ் 6-3, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் பட்டிடுஸ்டாவிடம் வீழ்ந்தார். மகளிர் பிரிவில் பிளிஸ்கோவா 6-3, 6-2, 6-4 என ஹைஷை வீழ்த்தினார். விட்டோலினா 6-3, 6-7, 6-2 என ஸக்காரியை வென்றார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஆடவர் பிரிவில் நடால்,பெடரர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆடவர் பிரிவில் நடால் 6-3, 3-6, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை வென்றார். 
2 முறை நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிர்ஜியோஸ், ஏற்கெனவே நடாலை கடுமையாக விமர்சனம் செய்தவர். தற்போது அவரை வீழ்த்தியுள்ளார் நடால்.
மற்றொரு ஆட்டத்தில் பெடரர் 6-1. 7-6, 6-2 என செட் கணக்கில் பிரிட்டனின் ஜே கிளார்க்கை வென்றார். இருவரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் கெர்பரை 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் லாரன் டேவிஸிடம் தோல்வியுற்றார். செரீனா வில்லியம்ஸ் 2-6, 6-2, 6-4 என ஸ்லோவேனியாவின் காஜா ஜுவானை வீழ்த்தினார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT