இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நீண்ட நாள் உலகக் கோப்பை சாதனையை முறியடித்தார் ஆப்கன் இளம் வீரர் இக்ரம் அலி கில்.
மே.இ.தீவுகள்-ஆப்கன் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கன் தோல்வியைத் தழுவியது. அதன் வீரர் இக்ரம் அலி சிறப்பாக ஆடி 86 ரன்களை விளாசினார்.
கடந்த 1992 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சச்சின் 81 ரன்களை விளாசினார். அப்போது அவர் 18 ஆண்டுகள், 318 நாள் என்ற வயதில் உலகக் கோப்பை வரலாற்றில் 80-க்கு அதிகமாக ரன்கள் அளித்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்நிலையில் தற்போது இக்ரம் அலி அதை முறியடித்துள்ளார். 18 ஆண்டுகள் மற்றும் 278 நாள்கள் என்ற வயதில் அவர் 86 ரன்களை அடித்து சச்சின் சாதனையை முறியடித்தார். காயமடைந்த முகமது ஷாஸாதுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட இக்ரம் அலி, ஜாம்பவான் சச்சின் சாதனையை முறியடித்தது பெருமை தருவதாக கூறியுள்ளார்.