செய்திகள்

3-ஆவது பெண் குழந்தைக்கு தந்தையான டேவிட் வார்னர்

2nd Jul 2019 10:53 AM | Raghavendran

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலிய அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னர் 3-ஆவது பெண் குழந்தைக்கு சமீபத்தில் தந்தையானார். உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள டேவிட் வார்னர் 2 சதம், 3 அரைசதம் உட்பட 516 ரன்கள் குவித்து சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவரது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக டேவிட் வார்னர், கேன்டீஸ் தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஜூலை 1-ஆம் தேதி 3-ஆவதாக மற்றொரு பெண் குழந்தை லண்டனில் பிறந்தது. 

எங்கள் குடும்பத்தின் புதிய வரவான இஸ்லா ரோஸ் வார்னரை அன்புடன் வரவேற்கிறோம். தாயும், சேயும் சகோதரிகளும் சிறப்புடன் உள்ளனர், பெருமைக்குரிய தந்தையானேன் என்று டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஈவி மே மற்றும் இண்டி ரே என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT